சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் -செவ்வல்லிப்பூவை ஒத்த
சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து;1702. | சேதாம்பல் போது அனைய செங் கனி வாய் வெண் தளவப் போது ஆம் பல் தோன்ற, புணர் முலைமேல் பூந் தரளம் மா தாம்பு அற்றென்ன மழைக் கண்ணீர் ஆலி உக, நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார். |
நாதாம் பற்றா மழலை நங்கைமார் - நாவின் கண் பிடிப்புப்
பொருந்தாத மழலைச்சொற்களைப் பேசுகின்ற இனிய இளமகளிர்;
சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் -செவ்வல்லிப்பூவை ஒத்த
சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து; வெண் தளவப் போதுஆம்பல்
தோன்ற - வெண்மையான முல்லையின் மலர் அரும்பு ஆகிய பல் வெளித்
தெரிய; புணர்முலைமேல் - இரண்டாகச் சேர்ந்தமார்பகங்களின் மேல்;
மழைக் கண்ணீர் ஆலி -மழை போன்ற கண்ணீர்த்துளி; பூந்தரளம்-
அழகிய முத்து; மா தாம்பு அற்று என்ன - சிறந்தகயிறுஅறுந்து
ஒவ்வொன்றாக விழுவது போல; உக - சிந்த; ஏங்கினார்-
அழுதார்கள்.