Monday, March 25, 2019

மாழை - மாவடு

1486.மாழை ஒண் கணி உரைசெய,
     கேட்ட மந்தரை, ‘என்
தோழி வல்லள்; என் துணை வல்லள்’
     என்று, அடி தொழுதாள்;
‘தாழும் மன் நிலை; என் உரை
     தலைநிற்பின், உலகம்
ஏழும் ஏழும் உன் ஒரு மகற்கு
     ஆக்குவென்’ என்றாள்.
     மாழை ஒண் கணி - (பிளந்த) மாவடுவைப் போலும் ஒள்ளிய
கண்களையுடைய கைகேயி; உரைசெய - (இவ்வாறு) சொல்ல;  கேட்ட -அதுகேட்ட;  மந்தரை - கூனி;  ‘என் தோழி வல்லள் - என் தோழி
வல்லமையுடையவள்;  என் துணை வல்லள்’ -  என்உதவியாய தலைவி
திறமைக்காரியே;  என்று - எனச் சொல்லி;  அடி தொழுதாள் - கைகேயி
காலில் வணங்கினாள்; (பிறகு) ‘மன் நிலை தாழும் - அரசனாகிய தயரதன்
கொண்டுள்ள முடிவுதாழ்ச்சியடையும்;  என் உரைதலை நிற்பின் - என்
சொல்லை (நீ) உன்னுடைய தலைமேற்கொண்டுநிற்பதனால்;  உன் ஒரு
மகற்கு - 
உன்னுடைய ஒப்பற்ற மகனாகிய பரதனுக்கு;  உலகம்ஏழும்
ஏழும் ஆக்குவேன்’ -
 பதினான்கு உலகங்களையும்   உரிமையாகச்
செய்வேன்;’  என்றாள்- என்று சொன்னாள்.
     தன் கருத்துக்குக் கைகேயி உடன்பட்டமைபற்றிப் பாராட்டினாள்.
பிறகு தயரதனைக் கண்டோவேறு காரணத்தாலோ மனம் மாறிவிடக் கூடாது
என்பதற்காக, ‘என் உரை தலை நிற்பின்’  என்றுஆணையிட்டாள். மனம்
மாறாத பொழுது கெஞ்சுவதும், மனம் மாறித் தன் வசம் ஆனபோது
விஞ்சுவதும் இத்தகைய சூழ்ச்சியாளர் இயல்பேயாம். முழுமையாகக்
கைகேயியைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துமேற் கூறுகின்றாள். 88

Sunday, January 6, 2019

வேங்கை (மரம்) / வழை மரம்

வேங்கை (மரம்) - (Pterocarpus marsupium)

Kambar Most Described Western Ghats in Kambaramayanam these are some examples, In those days the People lived along with the Nature The time of வேங்கை (Pterocarpus marsupium) Flowering time only the women getting marriage and Picking fruits,flowers,vegitables and some agricultural harvesting methods will be occurring in this time

Flowering time :: June to October.
Fruiting time :: December to March.
Time of harvesting of fruits :: March to April.

845.
பண் மலர் பவளச் செவ் வாய்ப்
   பனி மலர்க் குவளை அன்ன
கண் மலர்க் கொடிச்சிமார்க்குக்
   கணித் தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி.
   புதிய தேன் உதவும் நாகத்
தண் மலர் என்று. வானத்
   தாரகை தாவும் அன்றே!
 
பண்மலர்  பவளச்  செவ்வாய் - பண்ணிசை  தோற்றும்  பவளம்
போன்ற  செவ்வாயினையும்;  பனிக்குவளை மலர் அன்ன - குளிர்ந்த
குவளை   மலர்   போன்ற;   கண்  மலர்  -  கண்களையும்  பெற்ற
முகத்தாமரையையுடைய;     கொடிச்சிமார்க்கு    -    குறிஞ்சிநிலப்
பெண்களுக்கு;   கணித்   தொழில்   புரியும்-  சோதிடத்   தொழில்
புரிந்துவரும்; வேங்கை உண்மலர் - வேங்கை  மரத்தின் தேனையுண்ட
மலர்களின் மேல்; வெறுத்த தும்பி - வெறுப்புற்ற கருவண்டுகள்; புதிய
தேன் உதவும் 
- புதிய தேனைத் தருகின்ற; நாகம் தண் மலரென்று -
சுரபுன்னை   மலரென்று   கருதி;  வானத்  தாரகை  -  விண்ணிலே
விளங்குகின்ற நடசத்திரங்களின் மேல்; தாவும் - தாவுகின்றன. 
வேங்கை     நன்னாளில்  மலர்தலும்.  அந்த  நாளில் மலைமகளிர்
மணம்  புரிதலும்.  அது பூத்தபோது  மகளிர்  தினைப் புனங் கொய்யத்
தொடங்குதலும்    வழக்காதலின்    அவ்     வேங்கை    சோதிடரை
ஒப்பதாயிற்று.  
‘மலரின்  தேனைக்  குடித்ததால்  தேன்  நீங்கிய  அந்த
வேங்கை   மலரை  வெறுத்தது   தும்பி;  பின். வானத்திலே விளங்கும்
விண்மீன்களைக்   கண்டு  அவற்றைச்   சுரபுன்னை( வழை மரம் )  மலராக  மயங்கி
அவற்றின்மேல்   தாவியது   என்றார்.   மயக்கவணியை   அங்கமாகக்
கொண்டு   வந்த   தொடர்புயர்வு   நவிற்சியணி.  கணி:   முகூர்த்தம்
அறிவிப்பவன்.                                              3

வழை மரம்

வழை (Ochrocarpos longifolius) என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும்.

'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம்.

ஏழிலைப்பாலை (Alstonia scholaris)

ஏழிலைப்பாலை (Alstonia scholaris)

இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இதன் தாவரவியல் பெயர் அல்சிடோனியா ச்காலரிசு என்பதாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெரிதும் காணப்படுகிறது. இதற்கு ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை என்னும் வேறுப்பெயர்களும் உள. இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற மரமாகும். இது அபோசயனேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இம்மரம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பயன்படும் கரும்பலகைகளைச் செய்யப் பயன்படுகிறது. இம்மரம் பள்ளிச் சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ள உதவுவதால் இதற்கு ச்காலரிசு (Scholaris) என்னும் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த மரமாகும். இதற்குப் பேய்மரம் என்றும் பெயருண்டு. இம்மரத்தில் பேய் உலாவுவதாக மலைவாழ் மக்களிடம் நம்பப்படுகிறது 


  • ஏழிலைப்பாலை 40 மீ மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும். இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும். அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் வெளியிடும் பண்பைப் பெற்றவை.
  • இதன் சிறப்புப் பண்பாக இதன் இலைகள் ஓரிலைக்காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகள் காணப்படும். பெரும்பாலும் ஏழு இலைகள் காணப்படுவதால் இதற்கு ஏழிலைப்பாலை எனப்பெயர் பெற்றது என அறியலாம்.
  • பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

  • இதன் மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழமையான மருத்துவத்தில் இவை மலேரியா என அறியப்படும் கொசுவினால் பரவும் தொற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
  • இம்மரத்திலிருந்து கரும்பலகைகள் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன.
  • இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப் பயன்படுகிறது.

818.
பாத்த யானையின் பதங்களில்
   படு மதம் நாற.
காத்த அங்குசம் நிமிர்ந்திட.
   கால் பிடித்து ஓடி.
பூத்த ஏழிலைப் பாலையைப்
   பொடிப் பொடி ஆக.
காத்திரங்களால். தலத்தொடும்
   தேய்த்தது - ஓர் களிறு.
 
பாத்த  யானையின் - (அணியணியாக) பிரித்துள்ள யானைகளைக்
கட்டிய;  பதங்களில் - இடங்களில்; படு மதம் - தோன்றும் மதநீரின்;
நாற - மணம் போன்று (ஏழிலைப் பாலையிலிருந்து) மணம்  வீசியதால்;
ஓர் களிறு - (அதைத் தாங்காத) ஒரு யானையானது; காத்த அங்குசம்
நிமிர்ந்திட
  -  (தன்னைக்)  கட்டுப்படுத்துகின்ற  பாகன்  கையிலுள்ள
அங்குசமானது  நிமிர்ந்து  விடும்படி;  கால்பிடித்து  ஓடி - (மதத்தின்
மணம்  வந்த)  வழியைப் பற்றிக் கொண்டு ஓடிப்போய்; பூத்த ஏழிலப்
பாலையை
   -   (மதமணம்   வருவதற்குக்   காரணமான)  பூத்துள்ள
ஏழிலைப் பாலை  மரத்தை;   பொடிப்   பொடி   ஆக -  சிறுசிறு
தூள்களாகுமாறு; காத்திரங்களால்- முன்னங்கால்களால்; தலத்தொடும்
தேய்த்தது
 - தரையோடு தேய்த்துவிட்டது. 
சேனை     தங்கிய  சந்திர சயிலத்தின் சாரலில். ஏழிலைப் பாலை
மரத்திலிருந்து  யானையின்  மதமணம்  போன்ற மணம் வீச. யானைக்
கூட்டத்திலிருந்த  யானைகளில்  ஒன்று  மோப்பத்தால் அதையுணர்ந்து
மதவெறியால்   பாகனுக்கு   அடங்காமல்   அங்குசமும்   நிமிர்ந்திட
மதமணம்  வந்த  வழியை நாடிச்  சென்று  அங்குள்ள ஏழிலைப்பாலை
மரத்தைப்   பொடிபொடியாக   ஆகுமாறு   தன்  முன்னங்கால்களால்
தேய்த்தது என்றார். ஏழிலைப் பாலை: ஏழு  நிரையாக அடுக்கிய நீண்ட
இலைகளையுடைய  பாலை என்பார்  பரிமேலழகர் (பரிபா. 21-13) ‘சப்த
பர்ணீ’ என்று இதனை வடமொழியில் குறிப்பர்.                  6 

தேவதாரு

Kamba Ramayanam  - Bala kandam - Varai Kaatchi padalam

சந்திரசயில  மலை ( Chandra saila Malai )
In This mountains Devataru Tree (தேவதார  மரம்) and Sandal trees ( சந்தன மரம் ), Mara Maram (Sonneratia ApetalaBuchham), Maa maram (Mango tree)
are the Most Grown

தேவதாரு

தேவதாரு (Cedrus அல்லது Cedar, Pine, Erythroxylon monogynum, Sembulichan,
Devadara, Red cedar,
Bastard Sandal) என்பது பினாசியே குடும்ப ஊசியிலை வகை மரமாகும். இவை மேற்கு இமயமலை மற்றும் மத்தியதரைப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டவை. இமயமலையில் 1,500–3,200 மீ உயரத்திலும் மத்தியதரையில் 1,000–2,200 மீ உயரத்திலும் அமைந்துள்ளன

813.
கோலை ஆர் வடக் கொழுங் குவடு
   ஒடிதர நிவந்த.
ஆவி வேட்டன. வரி சிலை
   அனங்கன் மேல் கொண்ட.
பூவை வாய்ச்சியர் முலை சிலர்
   புயத்தொடும் பூட்ட.
தேவதாரத்தும். சந்தினும்.
   பூட்டின - சில மா.
 
கோவை     ஆர்   -    முத்துவடம்    முதலியன     நிரம்ப
அணைந்துள்ளனவும்; வட கொழுங்குவடு - வடதிசையிலுள்ள செழித்த
மேருமலையும்; ஒடிதர - தோற்கும்படி?; நிவந்த  - உயர்ந்துள்ளனவும்;
ஆவிவேட்டன  -  (தம் காதலரான) ஆடவரின் உயிரை(க் கொள்ளை
கொள்ள)  விரும்பியனவும்;  வரிசிலை அனங்கன்மேல் - கட்டமைந்த
வில்லையுடைய   மன்மதனால்   தன்  தொழிலுக்குக்  (காம  வேட்கை
எழுப்பவும்); கொண்ட -ஆடவர் கருவியாகக் கொண்ட; முலைகளை -
(தம்)  கொங்கைகளை;  பூவை  வாய்ச்சியர் - நாகணவாய்ப் புள்ளைப்(Myna)
போலஇனிய சொற்கள் பேசும்  மகளிர்;
 சிலர்  புயத்தொடும் பூட்ட-
ஆடவர் சிலரின்  புயங்களோடு  அணைக்க;  கோவை ஆர் வடம் -
வானத்தையளாவிய  ஆலமரத்தின்; கொழுங் குவடு ஒடிதர - செழித்த
கிளைகள்  ஒடியும்படி;  நிவந்த  -  ஓங்கியனவும்;  ஆவிவேட்டன -
(தண்ணீர்  பருக) தடாகத்தை விரும்பியனவும்; வரிசிலை அனங்கன் -
கட்டமைந்த   வில்லையுடைய    மன்மதனைப்    போன்ற   வீரனை;
மேல்கொண்ட  -  (தம்)  மேல் கொண்டிருப்பனவுமான; சிலமா - சில
யானைகள்;  தேவதாரத்தும்  - தேவதார  மரங்களிலும்;  சந்தினும் -
சந்தன மரங்களிலும்; 
பூட்டின - கட்டப்பட்டன. 
சந்திரசயில     மலையில் யானைகளின் மேல் இருந்த மகளிர். தம்
தனங்கள்  கணவரின்   தோள்களில்  படுமாறு அவரைத் தழுவியவாறு
கீழே   இறங்கினர்;   அந்த  யானைகள்   மரங்களில்  கட்டப்பட்டன.
சிலேடையணி  -  கொங்கைக்கும்  யானைக்கும்  சிலேடை. தேவதாரு.
சந்தனம்   என்ற    மரங்களில்    யானைகள்   பூட்டப்பட்டனபோல.
பெண்களால்    தனங்கள்  ஆண்களின்  தோள்களில்  பூட்டப்பட்டன
என்ற உவமை தொனிக்கிறது. 
தனங்களுக்கு யானைகளும். தோள்களுக்குக் கட்டுத்தறியாக உதவும்
மரங்களும்  உவமை.  தனங்கள்  தம்  காதலர்க்குக் காமவேதனையை
மிகுதியாக   உண்டாக்குவதால்  ‘அனங்கன்  மேற்கொண்ட’  என்றும்.
‘ஆவி வேட்டன’ என்றும் கூறினார். 
முலை  - ‘ஆவி வேட்டன’ - அகிற்புகையை விரும்பின; வரிசிலை
அனங்கன்மேல்     கொண்ட-கட்டமைந்த    கரும்பு    வில்லையும்
மன்மதனையும் தொய்யிலாக மேலே எழுதப்பெற்றன.             1 

மராஅம் (மரம்)

மராஅம் (மரம்)

மரா மரத்தைப் பழந்தமிழ் மராஅம் என்றே வழங்கியது. பின்னர் இதனை மராம் என்றனர். இராமன் ஏழு மரா மரத்தைத் துளைத்து அம்பு எய்த செய்தி நமக்குத் தெரியும்.
மராஅம் மலர்
மராஅம் பூவின் நிறம் வெள்ளை. [1]
சுண்ணாம்பு நீறு போல் வெண்மையாகப் பூக்கும். [2]
பலராமன் போல் வெண்ணிறம் கொண்டது. [3]
மணம் மிக்கது. [4]
பூ வலமாகச் சுழன்றிருக்கும். [5]
குராலொடு மராஅம் ஊர்த்தெருவில் ஓங்கிப் பூக்கும். [6]
பயன்பாடு
குவித்து விளையாடும் பூ. [7]
கூந்தலில் சூடும் பூ. [8]
மகளிர் கூந்தலில் பாதிரி, அதிரல் ஆகிய பூக்களோடு மராஅம் பூவையும் அடைச்சிக்கொள்வர் (சடைவில்லை ஆக்கிச் செருகிக்கொள்வர்). [9]
கானவன் மராஅம் மரத்தில் ஏறிக்கொண்டு யானைமேல் வேல் எறிவான். [10]
பருந்து இருக்கும் அளவுக்கு உயரமானது. [11]
கொற்றவை உகந்த மலர். அதிரல், பாதிரி, மராஅம் மலர்கள் அணங்கு (கொற்றவை) மேல் உதிர்ந்து அவளைப் பராவும் (துதிபாடும்). [12]
ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர். [13]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்
கடம்பு மரம்

அடிக்குறிப்பு

  1.  வால் வீ செறிந்த மராஅம் - மணிமேகலை 19-76
  2.  சுதை விரித்து அன்ன பல்பூ மராஅம் - அகநானூறு 211-2
  3.  ஒருகுழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅம் - கலித்தொகை 26-1
  4.  மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல் - அகநானூறு 21-12
  5.  வலஞ்சுரி மராஅம் வேய்ந்த நம் மணம் கமழ் தண்பொழில் - ஐங்குறுநூறு 348
  6.  அகநானூறு 265-20
  7.  குறிஞ்சிப்பாட்டு 85
  8.  தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் - நற்றிணை 20
  9.  அகநானூறு 261-4
  10.  அகநானூறு 172-7
  11.  மராஅம் ஏறி ... பருந்து உயவும் என்றூழ் - அகநானூறு 81-8
  12.  அகநானூறு 99-8
  13.  நல்லவர் அணி நிற்ப, துறையும், ஆலமும், தொல்வலி மராஅமும், முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ. - கலித்தொகை 101

724.‘மரா மரம் இவை என
   வலிய தோளினான்;
“அரா
-அணை அமலன்” என்று
   அயிர்க்கும் ஆற்றலான்;
‘இராமன்’ என்பது பெயர்;
   இளைய கோவொடும்.
பராவ அரு முனியொடும்.
   பதி வந்து எய்தினான்;
 
(அந்தக்    குமரன்) இவை மராமரம் என-  மராமரம் என்னும்படி;
வலிய  தோளினான் 
-  வன்மையான  தோள்களையுடையவன்;
  அரா
அணை  அமலன்  என்று  
-  ஆதி சேடனாகிய படுக்கையில்  பள்ளி
கொள்ளும்   திருமால்தான்   அவதரித்தானோ  என்று;   அயிர்க்கும்
ஆற்றலான்   
-  ஐயுறக்  கூடிய  ஆற்றல்  படைத்தவன்;   பெயர் -
(அவனுக்கு)  அவனது  பெயர்;  இராமன் என்பது - இராமன் என்பது
(அவன்);  இளைய  கோவொடும்  - தம்பியான அரச  குமாரனோடும்;
பராவ   அரு   முனியொடும்  
-  அளவிட்டுப்  புகழ்வதற்கு  அரிய
முனிவனோடும்;  பதி  -  (நம்) நகரை;  வந்து  எய்தினான் -  வந்து
சேர்ந்தான்.
தசரதன்  மைந்தனான  இராமன் தம்பியோடும் விசுவாமித்திரனுடனும்
மிதிலை நகர்க்கு வந்தான்.                                   59




மரா மரம்

814.
நேர் ஒடுங்கல் இல் பகையினை
   நீதியால் வெல்லும்
சோர்வு இடம் பெறா உணர்வினன்
   சூழ்ச்சியே போல.
காரொடும் தொடர் கவட்டு எழில்.
   மராமரக் குவட்டை
வேரொடும் கொடு. கிரி என
   நடந்தது - ஓர் வேழம்.
 
ஓர் வேழம் - ஒரு யானையானது; நேர் ஒடுங்கல் இல் - நேராக
அடங்காத; பகையினை  -  பகைவரை; நீதியால் வெல்லும் - (அரச)
தந்திரத்தால்   வெல்லுகின்ற;    சோர்வு   இடம்பெறா   -   மனத்
தளர்ச்சியில்லாத; உணர்வினன் - நல்லுணர்வுடைய அரசனது; சூழ்ச்சி
போல
 - ஆலோசனை  போல;  காரொடும்  தொடர்  கவடு - மேக
மண்டலத்தை   அளாவும்  கிளைகளையுடைய;  எழில்  மராமரம்  -
அழகிய மராமரத்தின்; குவட்டை - அடிப்பகுதியை; வேரொடும் கொடு
-  வேரோடு பறித்துக்கொண்டு; 
 கிரிஎன  -  மலைபோல; நடந்தது -
நடந்து சென்றது.
கட்டிய     மரத்திலிருந்து    தன்னை    விடுவிக்க    எண்ணிய
யானையொன்று.  தன் சூழ்ச்சியால் அம் மரம்  முழுவதையும் வேரோடு
சாய்த்து  இழுத்துச்  சென்றது.  இது. தன்னைப் போரில் அகப்படுத்திய
பகைமன்னனிடமிருந்து விடுவிக்க  வேண்டித்  தந்திரத்தைக் கையாண்ட
தளராத ஊக்கமுடையவனது செயல் போன்றது. குவடு - ஆகுபெயர்.  2