Sunday, January 6, 2019

ஏழிலைப்பாலை (Alstonia scholaris)

ஏழிலைப்பாலை (Alstonia scholaris)

இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இதன் தாவரவியல் பெயர் அல்சிடோனியா ச்காலரிசு என்பதாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெரிதும் காணப்படுகிறது. இதற்கு ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை என்னும் வேறுப்பெயர்களும் உள. இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற மரமாகும். இது அபோசயனேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இம்மரம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பயன்படும் கரும்பலகைகளைச் செய்யப் பயன்படுகிறது. இம்மரம் பள்ளிச் சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ள உதவுவதால் இதற்கு ச்காலரிசு (Scholaris) என்னும் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த மரமாகும். இதற்குப் பேய்மரம் என்றும் பெயருண்டு. இம்மரத்தில் பேய் உலாவுவதாக மலைவாழ் மக்களிடம் நம்பப்படுகிறது 


  • ஏழிலைப்பாலை 40 மீ மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும். இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும். அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் வெளியிடும் பண்பைப் பெற்றவை.
  • இதன் சிறப்புப் பண்பாக இதன் இலைகள் ஓரிலைக்காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகள் காணப்படும். பெரும்பாலும் ஏழு இலைகள் காணப்படுவதால் இதற்கு ஏழிலைப்பாலை எனப்பெயர் பெற்றது என அறியலாம்.
  • பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

  • இதன் மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழமையான மருத்துவத்தில் இவை மலேரியா என அறியப்படும் கொசுவினால் பரவும் தொற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
  • இம்மரத்திலிருந்து கரும்பலகைகள் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன.
  • இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப் பயன்படுகிறது.

818.
பாத்த யானையின் பதங்களில்
   படு மதம் நாற.
காத்த அங்குசம் நிமிர்ந்திட.
   கால் பிடித்து ஓடி.
பூத்த ஏழிலைப் பாலையைப்
   பொடிப் பொடி ஆக.
காத்திரங்களால். தலத்தொடும்
   தேய்த்தது - ஓர் களிறு.
 
பாத்த  யானையின் - (அணியணியாக) பிரித்துள்ள யானைகளைக்
கட்டிய;  பதங்களில் - இடங்களில்; படு மதம் - தோன்றும் மதநீரின்;
நாற - மணம் போன்று (ஏழிலைப் பாலையிலிருந்து) மணம்  வீசியதால்;
ஓர் களிறு - (அதைத் தாங்காத) ஒரு யானையானது; காத்த அங்குசம்
நிமிர்ந்திட
  -  (தன்னைக்)  கட்டுப்படுத்துகின்ற  பாகன்  கையிலுள்ள
அங்குசமானது  நிமிர்ந்து  விடும்படி;  கால்பிடித்து  ஓடி - (மதத்தின்
மணம்  வந்த)  வழியைப் பற்றிக் கொண்டு ஓடிப்போய்; பூத்த ஏழிலப்
பாலையை
   -   (மதமணம்   வருவதற்குக்   காரணமான)  பூத்துள்ள
ஏழிலைப் பாலை  மரத்தை;   பொடிப்   பொடி   ஆக -  சிறுசிறு
தூள்களாகுமாறு; காத்திரங்களால்- முன்னங்கால்களால்; தலத்தொடும்
தேய்த்தது
 - தரையோடு தேய்த்துவிட்டது. 
சேனை     தங்கிய  சந்திர சயிலத்தின் சாரலில். ஏழிலைப் பாலை
மரத்திலிருந்து  யானையின்  மதமணம்  போன்ற மணம் வீச. யானைக்
கூட்டத்திலிருந்த  யானைகளில்  ஒன்று  மோப்பத்தால் அதையுணர்ந்து
மதவெறியால்   பாகனுக்கு   அடங்காமல்   அங்குசமும்   நிமிர்ந்திட
மதமணம்  வந்த  வழியை நாடிச்  சென்று  அங்குள்ள ஏழிலைப்பாலை
மரத்தைப்   பொடிபொடியாக   ஆகுமாறு   தன்  முன்னங்கால்களால்
தேய்த்தது என்றார். ஏழிலைப் பாலை: ஏழு  நிரையாக அடுக்கிய நீண்ட
இலைகளையுடைய  பாலை என்பார்  பரிமேலழகர் (பரிபா. 21-13) ‘சப்த
பர்ணீ’ என்று இதனை வடமொழியில் குறிப்பர்.                  6 

No comments:

Post a Comment