Tuesday, July 31, 2018

அசோகு - Saraca asoca (the ashoka tree; lit., "sorrow-less")


அசோகு அல்லது அசோகம் அல்லது ஆயில (Ashoka treeSaraca asoca) என்பது பபசியா குடும்பத்தைச் சேர்ந்த கசல்பினியோடே துணைக் குடும்பத் தாவரமாகும்.[1] இம் மரம் இந்திய துணைக் கண்டத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலும் உள்ள கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புபட்டது.

அசோக மரம் மழை அதிகம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. விந்திய மலை தொடரின் தெற்கு மத்திய பகுதிகளில் (ஆந்திர, கர்நாடக, நீலகிரி, மத்திய மேற்கு தொடர்ச்சி மலை) இவைகள் பரவிக் கிடக்கின்றன.
அழகிய தோரணம் போல கவிழ்ந்து தொங்கும் அடர்ந்த இலைகள் , இனிய நாற்றம் உடைய மலர்கள், அசோக மரத்தின் சிறப்பு அம்சங்கள். எபோழுதும் பச்சை பசேல் என்று , சிறிய அடர்த்தியான இலைகளை கொண்டவை.
இதன் பூ பூக்கும் காலம் சுமார் (பிப்ரவரி முதல் அப்ரைல்). அசோக மலர்கள் கனமாகவும் கொத்து கொத்துதாக இருக்கும். இதன் நிறம் ஆரஞ்-மஞ்சள் , காயக்காய சிவப்பு நிறமாக மாறும்.
இவை காட்டு மரம், அனால் அழிந்து போகும் கட்டதில் உள்ளது. தான்தோணியாக தோன்றுவது அரிதாகவே உள்ளது.அனால் தனித்து நட்ட மரங்கள் இப்பவும் மத்திய, கிழக்கு ஹிமாலய அடிவாரத்தில் ,மற்றும் மும்பை வடக்கு பகுதிகளிலும் காணப்படுகின்றன.
சில சாதி(வகை) மரங்களே உள்ளன. ஒரு வகை, பெரிதாகவும் பரந்தும் இருக்கின்றன.
இன்னொரு வகைகையான குழாய் வடிவம் கொண்ட மரங்கள் அதிகமாக இப்பொழுது சாகுபடி செய்யபடுகின்றன.

மருத்துவ குணங்கள்

ரத்தபேதி, சீதபேதி, மாதவிலக்குக் கோளாறுகள் (வெள்ளைப்படுதல், மாதவிடாயில் உண்டாகும் வயிற்றுவலி, மாத விலக்கில் அதிக ரத்தப்போக்கு), சர்க்கரை நோய், பித்த நோய்கள், இரத்த அழுத்தம், கருப்பைக் கோளாறுகள் (அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் குழாய்களில் உண்டாகும் குறைபாடுகள்), சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் குணமாக்கும்





866.
பின்னங்கள் உகிரின் செய்து.
   பிண்டி அம் தளிர்க் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பி.
   தே மலர் கொய்கின்றாரும்;
வன்னங்கள் பலவும் தோன்ற
   மணிஒளிர் மலையின் நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன.
   அகன் சுனை குடைகின்றாரும்.
 
பிண்டி   அம்  தளிர் - அசோகின் அழகிய தளிர்களை; உகிரில்
பின்னங்கள்  செய்து  
-  (தம்)  நகங்களால்  சிறு சிறு துண்டுகளாகக்
கிள்ளி;   கைக் கொண்ட   சின்னங்கள்  -  கைக்  கொண்ட  அத்
துண்டுகளை;  முலையின்  அப்பி  -  தம்  தனங்களிலே அழகுபடப்
பொருத்தி;தேன்மலர்  -  தேனுடைய மலர்களை; கொய்கின்றாரும் -
பறிப்பவரும்;  வன்னங்கள்   பலவும் - பலவகையான வண்ணங்களும்;
தோன்ற  
-  தோன்றும்படி;  மணி  ஒளிர்  மலையின் - நவமணிகள்
விளங்கும்  மலையிலே;  நில்லா  அன்னங்கள்  -  நிலையாக இருந்த
வாழாத  அன்னங்கள்;   புகுந்த என்ன - (இப்போது) புகுந்தன என்று
(கண்டோர்)  கருதும்படி;   அகல்சுனை  -  பரவியுள்ள  சுனைகளிலே;
குடைகின்றாரும்  
-  (அச்   சேனையில்  உள்ள  மாதர்கள்)  மூழ்கிக்
குளிப்பவராயினர். 
தளிர்     முறிகளைத்  தம்  தனங்களில் அப்பி அலங்காரம் செய்து
கொள்வது  மகளிர்  இயல்பாம்.  மாதர்கள்  மலர் கொய்தலையும். சுனை
குடைதலையும்   செய்தனர்   என்பது.   அன்னப்  பறவை  மருதநிலக்
கருப்பொருளாதலால் ‘மலையின் நில்லா’ என்றார்.  

Wednesday, July 25, 2018

கோங்கு (Golden (yellow) silk cotton flower)

கோங்கு அல்லது முள்ளிலவு என்பது ஓருவகை மரமாகும். இதன் இலைகள் கைபோல் பிரிந்த இலைகளையும், இலையுதிர் காலத்தில் தோன்றும் மிகவும் செந்நிற மலர்களையும் வெண்ணிற பஞ்சிற் பொதிந்த வழவழப்பான உருண்ட விதைகளையும் உடைய நெடிதோங்கி வளரும் மரம். மரமெங்கும் கூம்பு வடிவ முட்கள் வளர்ந்திருக்கும். தமிழகத்துக் காடுகளிலும் ஆற்றோரங்களிலும் தானே வளர்பவை. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின், பஞ்சு, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருமங்கலக்குடி, திருக்கோடி, திருக்கைச்சினம் முதலிய தலங்களில் கோங்கு தலமரமாக உள்ளது.

முள்ளிலவ மரம் (Bombax ceiba), (Bombax malabaricum) என்ற தாவரவியற் பெயராலும்
அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இதற்கு முள்ளிலவு என்பது தற்காலத்தியப் பெயராகும். இதற்கு சங்க இலக்கியத்தில் செந்நிற பூக்களையுடைய இலவமரம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை “ஈங்கை இலவம் தூங்கு இணர்க்கொன்றை” என குறிஞ்சிப் பாட்டிலும், “களிறு புலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்” என அகநானூற்றிலும் வரும் அடிகளால் அறியலாம்.



  • குறிப்பு

    • இதனைப் பஞ்சுமரம் எனவும் அழைப்பதுண்டு. இம்மரம் நீண்டு கிளைகளைக் கொண்டு வளர்வன.
    • இதனுள் முட்கள் காணப்படும். அவை தடித்தும் மொட்டுக்கள் போலவும் காட்சியளிக்கும்.
    • இம்மரத்தில் செந்நிறப் பூக்கள் பூக்கும்.

    பயன்கள்

    இதன் இலை, பூ, விதை, பட்டை, கோந்து, பஞ்சு, வேர் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இம்மரத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிவு, வெள்ளைப்பாடு இவை விலகும். விந்துவும், அணுக்களும் பலப்படும்



Kongam flower
yellow silk cotton flower
This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress..
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.






859.
பெருங் களிறு ஏயும் மைந்தர்
   பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணைக் கொங்கை அன்ன.
   பொரு இல். கோங்கு அரும்பின் மாடே.
மருங்கு எனக் குழையும் கொம்பின்
   மடப் பெடை வண்டும். தங்கள்
கருங் குழல் களிக்கும் வண்டும்.
   கடிமணம் புணரக் கண்டார்.
 
பெருங்களிறு  ஏயும் -  பெரிய ஆண் யானையை ஒத்த; மைந்தர்
பேரெழில்   ஆகத்தோடு   
-   இளைஞர்களின்  மிக்க  அழகுடைய
மார்பிலே;பொரும் துணைக் கொங்கை - தாக்கும் இரட்டையான தனங்
களை;     அன்ன   பொரு  இல் -  ஒத்த வேறு உவமை இல்லாத;
கோங்கு  அரும்பின் மாடு  
-  கோங்கு அரும்புகளினிடத்து; மருங்கு
எனக் குழையும் 
-  (அம் மகளிரின்)  இடையைப் போலத் துவளுகின்ற;
கொம்பின்  
-  பூங்கொம்பில் தங்கும்; மடப்பெடை வண்டும் - இளம்
பெண்  வண்டுகளும்;  தங்கள்  கருங்குழலில்  - தம் கரிய கூந்தலில்
படிந்து;   களிக்கும்  வண்டும்  -  களிக்கின்ற  ஆண்  வண்டுகளும்;
கடிமணம்  புணர  
-  புதுமணம்  செய்து  கொள்வதை;  கண்டார்  -
(மக்கள்) கண்டார்கள். 
தம்     தனம் போன்ற  கோங்கு அரும்பிலே பூங்கொம்பில் வாழும்
பெண்   வண்டுகளும்.
  கருங்கூந்தலில்   படிந்த  ஆண்  வண்டுகளும்
புதுமணம் புரிவதை அங்கே தங்கிய மகிளர் கண்டார் என்பது. 

இலவங்க பூக்கள் (Cinnamon)

இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை / கறுவாப்பட்டை (Cinnamon)
என்பது சின்னமாமம் வேரம் அல்லது சி. சேலானிக்கம் (சின்னமாமம் வேரம் என்பதற்கு சி. சேலானிக்கம் என்று பொருள்) என்னும் தாவரவியற் பெயரைக் கொண்டது. இது ஒரு சிறிய பசுமைமாறா மரமாகும். இது லாரசீயே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் ஆரம்ப உற்பத்தி இலங்கையாக இருப்பதுடன், அதிகமாக விளையும் இடமும் இலங்கையாக இருக்கிறது.[1]இந்த கறிமசால் பொருள் (கறியில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்) மரத்தின் அடித் தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது அடிக்கடி இதற்கு ஒத்த வேறு இனத் தாவரங்களான காசியா மற்றும் சின்னமாமம் பர்மான்னி போன்றவற்றுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. இந்த கறிமசால் பொருட்களும் இலவங்கப்பட்டை என்றே அழைக்கப்படுகின்றன. இலவங்கப்பட்டை, Yeast இல் உயிரணு சார்ந்த சுவாசத்தின் வீதத்தை குறைக்கிறது.






 மலை நிகழ்ச்சிகளை மாந்தர் காணுதல்
 
858.
கோடு உலாம் நாகப் போதோடு
   இலவங்க மலரும் கூட்டிச்
சூடுவார். களி வண்டு ஓச்சித்
   தூநறுந் தேறல் உண்பார்.
கேடு இலா மகர யாழில்
   கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும்
   பரிமுக மாக்கள் கண்டார்.

 
கோடு  உலாம்  -  கொம்புகளில்  பூத்த;  நாகப்  போதோடு  -
சுரபுன்னை  மலர்களோடு;  இலவங்க  மலரும்  கூட்டி  -  இலவங்க
மலரையும்    சேர்த்து;
    சூடுவார்    -   அணிகின்றவரான   அம்
மலைவாணர்கள்;  களி  வண்டு ஓச்சி - மதுக் களிப்புள்ள வண்டுகளை
ஓட்டிவிட்டு; தூநறுந்தேறல்  உண்பார்  -  தூய  மணம்  பொருந்திய
மதுவைக் குடிப்பவரானார்கள்; கேடு இலா மகர யாழின் - (அதனோடு)
குற்றம்  இல்லாத  மகர வீணையோடு கூடி; கின்னர மிதுனம் பாடும் -
இரட்டையர்களான     கின்னரமென்னும்    தேவசாதியர்    பாடுகின்ற;
பாடலால்  ஊடல் நீங்கும் 
- இனிய பாடலால் (தாம்) கொண்ட ஊடல்
நீங்குகின்றன;  பரிமுக மாக்கள்  கண்டார்  - குதிரை முகங்கொண்ட
தெய்வ மக்களையும் (அவர்கள்) கண்டார்கள். 
பூவைப்     பறித்துச்   சூடுதலும்   மதுவைப்  பருகுதலும்.  இனிய
பாடலைக்    கேட்டலும்    தேவசாதியினர்   செயல்களைக்    கண்டு
மகிழ்வதுமாக  அங்கே சென்ற  மக்கள்  இருந்தார்கள் என்பது. கின்னர
மிதுனம்:  ஆண்  பெண்களாகக்  கூடி வாழ்பவரும் இசை வல்லாருமான
தேவசாதியர்.  பரிமுக   மாக்கள்:   குதிரை  முகமும்  மனித  உடலும்
கொண்ட தேவசாதியர்.                                      16 

வழைமரம் ( சுரபுன்னை)

வழை (Ochrocarpos longifolius)
வழை (Ochrocarpos longifolius) என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும்.
'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம்.
வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
  • ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.
  • குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.
  • வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.
  • நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.
  • கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.
  • குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.
  • தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்த்து.
  • யானை விரும்பும் தழைமரம்.
  • மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.
  • வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.
  • வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.
பண்புப்பெயர்
வழைச்சு என்னும் சொல் ‘குழகுழத்’ தன்மையைக் குறிக்கும்.
867.
ஈனும் மாழை இளந் தளிர் ஏய் ஒளி
ஈனும். மாழை இளந் தளிரே - இடை.
மானும். வேழமும். நாகமும். மாதர் தோள்
மானும் வேழமும். நாகமும் - மாடு எலாம்.
 
இடை     ஈனும் -  (அம் மலையின்) நடுப்பாகத்தில் தளிர்க்கின்ற;
மாழை  இளந்தளிர் ஏய் 
- மாமரத்தின் இளைய தளிரையொத்த; ஒளி
ஈனும்  மாழை  
-  ஒளியைத்  தரும்  பொன்னின்;  இளந் தளிரே -
மெல்லிய   தகடுகளாகும்;   மாடு   எலாம்   -   அந்த   மலையின்
பக்கங்களிலெல்லாம்; மானும் வேழமும் - மானும் யானையும்; நாகமும்-  பாம்பும்;  மாதர் தோள்  மானும்  -  மகளிரின்  தோளையொத்த
தன்மையைக்   கொண்ட;   வேழமும்   நாகமும்   -  மூங்கில்களும்
சுரபுன்னை மரங்களும் (உள்ளன). 
யமகம்  என்னும்  மடக்கணி. மாழை: மாமரம். பொன். நாகம்: பாம்பு.
சுரபுன்னை.   





 மலை நிகழ்ச்சிகளை மாந்தர் காணுதல்
858.
கோடு உலாம் நாகப் போதோடு
   இலவங்க மலரும் கூட்டிச்
சூடுவார். களி வண்டு ஓச்சித்
   தூநறுந் தேறல் உண்பார்.
கேடு இலா மகர யாழில்
   கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும்
   பரிமுக மாக்கள் கண்டார்.

 
கோடு  உலாம்  -  கொம்புகளில்  பூத்த;  நாகப்  போதோடு  -
சுரபுன்னை  மலர்களோடு;  இலவங்க  மலரும்  கூட்டி  -  இலவங்க
மலரையும்    சேர்த்து;    சூடுவார்    -   அணிகின்றவரான   அம்
மலைவாணர்கள்;  களி  வண்டு ஓச்சி - மதுக் களிப்புள்ள வண்டுகளை
ஓட்டிவிட்டு; தூநறுந்தேறல்  உண்பார்  -  தூய  மணம்  பொருந்திய
மதுவைக் குடிப்பவரானார்கள்; கேடு இலா மகர யாழின் - (அதனோடு)
குற்றம்  இல்லாத  மகர வீணையோடு கூடி; கின்னர மிதுனம் பாடும் -
இரட்டையர்களான     கின்னரமென்னும்    தேவசாதியர்    பாடுகின்ற;
பாடலால்  ஊடல் நீங்கும் 
- இனிய பாடலால் (தாம்) கொண்ட ஊடல்
நீங்குகின்றன;  பரிமுக மாக்கள்  கண்டார்  - குதிரை முகங்கொண்ட
தெய்வ மக்களையும் (அவர்கள்) கண்டார்கள். 
பூவைப்     பறித்துச்   சூடுதலும்   மதுவைப்  பருகுதலும்.  இனிய
பாடலைக்    கேட்டலும்    தேவசாதியினர்   செயல்களைக்    கண்டு
மகிழ்வதுமாக  அங்கே சென்ற  மக்கள்  இருந்தார்கள் என்பது. கின்னர
மிதுனம்:  ஆண்  பெண்களாகக்  கூடி வாழ்பவரும் இசை வல்லாருமான
தேவசாதியர்.  பரிமுக   மாக்கள்:   குதிரை  முகமும்  மனித  உடலும்
கொண்ட தேவசாதியர்.                                      

காந்தள் (Gloriosa superba)

செங்காந்தள் அல்லது காந்தள்




செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa superbaஇலங்கை வழக்குகார்த்திகைப் பூ) என்பது ஒரு காந்தள்பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும்.
அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்துப் பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

தன்மைகள்

  • இக்கொடியின் தண்டு பசுமையானது. வலுவில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்தில் உள்ள மரஞ்செடி முதலியவற்றைப் பற்றுக்கோடாகப் பிடித்துக்கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும்.
  • கிளை விட்டுப் படரும் ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும் 1-1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது.
  • கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக்
    காம்பில்லை எனலாம். 3 அங்குலம் தொடக்கம் 6 அங்குலம் வரையான நீளம், 0.75 அங்குலம் தொடக்கம் 1.75 அங்குலம்வரை அகலமிருக்கும். மாற்றொழுங்கில் அல்லது எதிரொழுங்கில் அமைந்திருக்கும். கணுவிடைகள் வளராமையால் வட்டவொழுங்கில் அமைந்திருப்பதும் உண்டு. இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில், நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.
  • பூக்கள் பெரியவை. இலைக்கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) செப்டம்பர் தொடக்கம் ஜனவரியிலும்மார்ச்சிலும்மலர்கின்றன. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5 அங்குல நீளம், 0.3-0.5 அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.
  • தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet) நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.
  • இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6 அங்குலம், தாள் 1.5- 1.75 அங்குலம், மரகதப்பை 0.5 அங்குலம். முதுகொட்டியது, இங்குமங்கும் திரும்பக் கூடியது. சூலகம் 3 அறையுள்ளது. சூல் தண்டு 2அங்குலம் ஒரு புறம் மடங்கியிருக்கும்.

கிழங்கின் தன்மைகள்

இக்கிழங்கானது வடிகால் வசதியுடைய செம்மண், பொறை மண் போன்றவற்றில் வளரும். மண்ணின் pH மதிப்பு 6.0 முதல் 7.0 வரை இருப்பது இக்கிழங்கிற்கு ஏற்றது. இக்கிழங்கு V வடிவில் காணப்படும். கிழங்கு ஆனது ஆடிப்பட்டத்தில் நடவு செய்யப்படுகிறது.

கிழங்கின் வளர்ச்சி

கிழங்கு ஆனது நடவு செய்த 90 நாட்களில் பலன் தரத் தொடங்குகிறது. கிழங்கின் வளர்ச்சியைக் களைகள் பாதிக்காதவாறு 30, 60, 90 ஆகிய நாட்களில் களை எடுக்கப்படுகிறது. நட்ட உடன் நீர்ப்பாய்ச்சப்பட்டு பின்னர் 20-25 நாட்கள் கழித்து நீர்ப்பாய்ச்சுதல் நல்ல வளர்ச்சியைத் தரும். கிழங்கு வளரச் சராசரி மழையளவு 70 செ.மீ. ஆக இருக்க வேண்டும். கிழங்கு ஒவ்வொன்றும் 100 கிராம் எடைவரை இருக்கும். கோடைக் காலத்தில் கிழங்குகள் ஓய்வடைகின்றன. இதனால் காந்தள் கொடியானது துளிர்ப்பதில்லை.

அறுவடை

அயல்மகரந்தச் சேர்க்கைமூலம் கருவுற்ற பூக்கள்மூலம் உருவான காய்களிலிருந்து செடி ஒன்றிற்கு 100 கிராம் விதைகளும், ஒரு கிலோ கிராம் அளவிலான கிழங்கும் கிடைக்கும். ஓர் ஏக்கருக்குக் கிட்டத்தட்ட 500 கிலோ கிராம் அளவுக் கிழங்கு கிடைக்கும். விதைகள் Indian Rupee symbol.svg 2500 - Indian Rupee symbol.svg 3000 வரை விற்பனையாகும்.
இது ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். காந்தளை விதைகள் மூலமும் கிழங்குகள் மூலமும் பயிர் செய்யலாம். எனினும் கிழங்குகள் மூலமே வணிக வழியில் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.

பாதக விளைவுகள்

  • நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும்.
  • சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

காந்தளின் பெயர்கள்


  • இதன் பூத்தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், அக்கினிசலம் எனப்படும்.
  • இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.
  • இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.
  • இதுபற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும்.
  • வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.
  • கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது.
  • மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும்.
  • நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.
  • பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள்என்றும் குறிப்பிடுவர்.

ஏனைய மொழிப் பெயர்கள்

சிறப்புகள்

செங்காந்தள் (Gloriosa) அல்லது கார்த்திகைப்பூ ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் மாநில மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழத்தின் மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது.



854.
மாந் தளிர் அனைய மேனிக்
   குறத்தியர் மாலை சூட்டி.
கூந்தல் அம் கமுகின் பாளை
   குழலினோடு ஒப்புக் காண்பார்;
ஏந்து இழை அரம்பை மாதர்
   எரி மணிக் கடகம் வாங்கி.
காந்தள் அம் போதில் பெய்து.
   கைகளோடு ஒப்புக் காண்பார்.
 
மாந் தளிர் அனைய- மாந் தளிரைப் போன்ற; மேனிக் குறத்தியர்-  உடல்  நிறம்  கொண்ட  குறப்  பெண்கள்;  மாலை சூட்டி - மலர்
மாலைகளை அணிவித்து;  (பின்பு) கூந்தல் கமுகின் பாளை - கூந்தற்
கமுகின்   பாளைகளை;  குழலினோடு  ஒப்புக்  காண்பார்  -  (தம்)
கூந்தலோடு  வைத்து ஒப்பிட்டுக் காண்பார்கள்; ஏந்து இழை அரம்பை
மாதர்  
-  அழகிய  அணிகலன் பூண்ட தெய்வ மாதர்கள்; எரி மணிக்
கடகம்  வாங்கி  
-  நெருப்புப் போல ஒளிவிடும் மணிக் கடகங்களைக்
கழற்றி;  காந்தள் போதில்  பெய்து - காந்தள் மலர்களிலே அவற்றை
யணிந்து; கைகளோடு  ஒப்புக் காண்பார் - (தம்) கைகளோடு உவமை
காண்பார்கள்.
குறத்தியர்      கூந்தற்     கமுகின்      பாளைகளிலே     மலர்
மாலையையணிவித்து   அவை   தமது    கூந்தலோடு    ஒப்பாவதைக்
கண்டனர்.     தெய்வ     மகளிர்    தம்    கடகத்தை     வாங்கிக்
காந்தளிலேயணிந்து  அம்  மலர் தம்  கைக்கு  ஒப்பாவதைக் காண்பார்
என்பது.  மண்ணுலகத்தவரும்.  விண்ணுலகத்தவரும்  மகிழ்வதற்கு  அம்
மலை இடனாயுள்ளது என்றார்.                                12 

மந்தாரை (ஆத்தி)

மந்தாரை
முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை
தாவரவியல் பெயர் : Bauhinia purpurea L.

குடும்பம் : Caesalpiniaceae
ஆங்கிலம் : Butterfly plant
வளரிடம் : இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், தரிசு மற்றும் மித வெப்பமான பகுதிகளில் காணப்படும்.
வளரியல்பு : சிவப்பு மலர்கள் இலைகளோடு முனையில் காணப்படும். ஃபாளிக்கிள் மஞ்சரியில் அமைந்திருக்கும். புல்லிகள் ஒழுங்கற்ற முறையில் 3-5 பிளவுகள் கொண்டவை. வளமான மகரந்தத்தாள்கள் 3 அல்லது 4 வெடி கனி, குறுகி, தட்டையாக்கப்பட்டு திடமானவை. விதைகள் 12-15. வறண்ட பகுதிகளில் காணப்படும்.
மருத்துவப் பயன்கள் : மலர்கள் மிதமான பேதிமருந்து, உலர்ந்த மொட்டுகள் பூச்சிகளை நீக்கும். சீதபேதி மற்றும் மூலவியாதியைக் குணப்படுத்தும். பட்டை வயிற்றுப் போக்கினை நீக்கும். வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக்கட்டிகளைக் குணப்படுத்த உதவும், அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன் கலந்து குரல்வளைச் சுரப்பி வீக்கத்துக்குத் தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும்.




853.
ஆடவர் ஆவி சோர.
   அஞ்சன வாரி சோர.
ஊடலின் சிவந்த நாட்டத்து
   உம்பர்தம் அரம்பை மாதர்.
தோடு அவிழ் கோதைநின்றும்
   துறந்த மந்தார மாலை.
வாடல. நறவு அறாத.
   வயின் வயின் வயங்கும் மாதோ!

 
ஆடவர்  ஆவி   சோர  -  (தம்)  கணவரின்  உயிர்  வருந்தித்
தளரும்படி;  அஞ்சனம்  வாரி  சோர - (தீட்டிய) மையுடன் கண்ணீர்
பெருகுமாறு; ஊடலில்  சிவந்த  நாட்டத்து  -  புலவியால் செந்நிறம்
அடைந்த   கண்களையுடைய;  உம்பர்தம்   அரம்பை   மாதர்   -
தேவர்களின்   மனைவியர்;   கோதை  நின்றும்   துறந்த   -  தம்
முடிகளிலிருந்து கழற்றி எறிந்த; தோடு அவிழ் மந்தார மாலை - இதழ்
விரிந்த  மந்தார  மாலைகள்;  வாடல நறவு அறாது - வாடாதனவாகித்
தேனும்  நீங்காமல்; வயின் வயின் வயங்கம் - அந்தந்த இடங்களிலே
விளங்கும். 
ஊடல்     கொண்ட  தேவ  மாதர் தம் கணர் வருந்துமாறு சிவந்த
கண்களில்  கண்ணீரைப்  பெருக்கிக்  கழற்றியெறிந்த மந்தார மாலைகள்
அம்  மலையின்  பல  இடங்களிலும்  காணப்படும்   என்பது.  தெய்வ
மாலையாதலின் வாடாமலும். நறவு அறாமலும் இருந்தன.