வழை (Ochrocarpos longifolius)
வழை (Ochrocarpos longifolius) என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும்.
- 'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம்.
- வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
- ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.
- குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.
- வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.
- நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.
- கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.
- குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.
- தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்த்து.
- யானை விரும்பும் தழைமரம்.
- மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.
- வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.
- வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.
- பண்புப்பெயர்
- வழைச்சு என்னும் சொல் ‘குழகுழத்’ தன்மையைக் குறிக்கும்.
- 867.
ஈனும் மாழை இளந் தளிர் ஏய் ஒளி
ஈனும். மாழை இளந் தளிரே - இடை.
மானும். வேழமும். நாகமும். மாதர் தோள்
மானும் வேழமும். நாகமும் - மாடு எலாம்.இடை ஈனும் - (அம் மலையின்) நடுப்பாகத்தில் தளிர்க்கின்ற;
மாழை இளந்தளிர் ஏய் - மாமரத்தின் இளைய தளிரையொத்த; ஒளி
ஈனும் மாழை - ஒளியைத் தரும் பொன்னின்; இளந் தளிரே -
மெல்லிய தகடுகளாகும்; மாடு எலாம் - அந்த மலையின்
பக்கங்களிலெல்லாம்; மானும் வேழமும் - மானும் யானையும்; நாகமும்- பாம்பும்; மாதர் தோள் மானும் - மகளிரின் தோளையொத்த
தன்மையைக் கொண்ட; வேழமும் நாகமும் - மூங்கில்களும்
சுரபுன்னை மரங்களும் (உள்ளன).யமகம் என்னும் மடக்கணி. மாழை: மாமரம். பொன். நாகம்: பாம்பு.
சுரபுன்னை.
மலை நிகழ்ச்சிகளை மாந்தர் காணுதல்858.கோடு உலாம் நாகப் போதோடு
இலவங்க மலரும் கூட்டிச்
சூடுவார். களி வண்டு ஓச்சித்
தூநறுந் தேறல் உண்பார்.
கேடு இலா மகர யாழில்
கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும்
பரிமுக மாக்கள் கண்டார்.
கோடு உலாம் - கொம்புகளில் பூத்த; நாகப் போதோடு -
சுரபுன்னை மலர்களோடு; இலவங்க மலரும் கூட்டி - இலவங்க
மலரையும் சேர்த்து; சூடுவார் - அணிகின்றவரான அம்
மலைவாணர்கள்; களி வண்டு ஓச்சி - மதுக் களிப்புள்ள வண்டுகளை
ஓட்டிவிட்டு; தூநறுந்தேறல் உண்பார் - தூய மணம் பொருந்திய
மதுவைக் குடிப்பவரானார்கள்; கேடு இலா மகர யாழின் - (அதனோடு)
குற்றம் இல்லாத மகர வீணையோடு கூடி; கின்னர மிதுனம் பாடும் -
இரட்டையர்களான கின்னரமென்னும் தேவசாதியர் பாடுகின்ற;
பாடலால் ஊடல் நீங்கும் - இனிய பாடலால் (தாம்) கொண்ட ஊடல்
நீங்குகின்றன; பரிமுக மாக்கள் கண்டார் - குதிரை முகங்கொண்ட
தெய்வ மக்களையும் (அவர்கள்) கண்டார்கள்.பூவைப் பறித்துச் சூடுதலும் மதுவைப் பருகுதலும். இனிய
பாடலைக் கேட்டலும் தேவசாதியினர் செயல்களைக் கண்டு
மகிழ்வதுமாக அங்கே சென்ற மக்கள் இருந்தார்கள் என்பது. கின்னர
மிதுனம்: ஆண் பெண்களாகக் கூடி வாழ்பவரும் இசை வல்லாருமான
தேவசாதியர். பரிமுக மாக்கள்: குதிரை முகமும் மனித உடலும்
கொண்ட தேவசாதியர்.
No comments:
Post a Comment