கோங்கு அல்லது முள்ளிலவு என்பது ஓருவகை மரமாகும். இதன் இலைகள் கைபோல் பிரிந்த இலைகளையும், இலையுதிர் காலத்தில் தோன்றும் மிகவும் செந்நிற மலர்களையும் வெண்ணிற பஞ்சிற் பொதிந்த வழவழப்பான உருண்ட விதைகளையும் உடைய நெடிதோங்கி வளரும் மரம். மரமெங்கும் கூம்பு வடிவ முட்கள் வளர்ந்திருக்கும். தமிழகத்துக் காடுகளிலும் ஆற்றோரங்களிலும் தானே வளர்பவை. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின், பஞ்சு, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருமங்கலக்குடி, திருக்கோடி, திருக்கைச்சினம் முதலிய தலங்களில் கோங்கு தலமரமாக உள்ளது.
முள்ளிலவ மரம் (Bombax ceiba), (Bombax malabaricum) என்ற தாவரவியற் பெயராலும்
அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இதற்கு முள்ளிலவு என்பது தற்காலத்தியப் பெயராகும். இதற்கு சங்க இலக்கியத்தில் செந்நிற பூக்களையுடைய இலவமரம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை “ஈங்கை இலவம் தூங்கு இணர்க்கொன்றை” என குறிஞ்சிப் பாட்டிலும், “களிறு புலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்” என அகநானூற்றிலும் வரும் அடிகளால் அறியலாம்.
முள்ளிலவ மரம் (Bombax ceiba), (Bombax malabaricum) என்ற தாவரவியற் பெயராலும்
அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இதற்கு முள்ளிலவு என்பது தற்காலத்தியப் பெயராகும். இதற்கு சங்க இலக்கியத்தில் செந்நிற பூக்களையுடைய இலவமரம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை “ஈங்கை இலவம் தூங்கு இணர்க்கொன்றை” என குறிஞ்சிப் பாட்டிலும், “களிறு புலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்” என அகநானூற்றிலும் வரும் அடிகளால் அறியலாம்.
குறிப்பு
- இதனைப் பஞ்சுமரம் எனவும் அழைப்பதுண்டு. இம்மரம் நீண்டு கிளைகளைக் கொண்டு வளர்வன.
- இதனுள் முட்கள் காணப்படும். அவை தடித்தும் மொட்டுக்கள் போலவும் காட்சியளிக்கும்.
- இம்மரத்தில் செந்நிறப் பூக்கள் பூக்கும்.
பயன்கள்
இதன் இலை, பூ, விதை, பட்டை, கோந்து, பஞ்சு, வேர் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இம்மரத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிவு, வெள்ளைப்பாடு இவை விலகும். விந்துவும், அணுக்களும் பலப்படும்
Kongam flower
yellow silk cotton flower
yellow silk cotton flower
This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress..
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy.
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C.
859.
| பெருங் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு பொரும் துணைக் கொங்கை அன்ன. பொரு இல். கோங்கு அரும்பின் மாடே. மருங்கு எனக் குழையும் கொம்பின் மடப் பெடை வண்டும். தங்கள் கருங் குழல் களிக்கும் வண்டும். கடிமணம் புணரக் கண்டார். |
பெருங்களிறு ஏயும் - பெரிய ஆண் யானையை ஒத்த; மைந்தர்
பேரெழில் ஆகத்தோடு - இளைஞர்களின் மிக்க அழகுடைய மார்பிலே;பொரும் துணைக் கொங்கை - தாக்கும் இரட்டையான தனங் களை; அன்ன பொரு இல் - ஒத்த வேறு உவமை இல்லாத; கோங்கு அரும்பின் மாடு - கோங்கு அரும்புகளினிடத்து; மருங்கு எனக் குழையும் - (அம் மகளிரின்) இடையைப் போலத் துவளுகின்ற; கொம்பின் - பூங்கொம்பில் தங்கும்; மடப்பெடை வண்டும் - இளம் பெண் வண்டுகளும்; தங்கள் கருங்குழலில் - தம் கரிய கூந்தலில் படிந்து; களிக்கும் வண்டும் - களிக்கின்ற ஆண் வண்டுகளும்; கடிமணம் புணர - புதுமணம் செய்து கொள்வதை; கண்டார் - (மக்கள்) கண்டார்கள்.
தம் தனம் போன்ற கோங்கு அரும்பிலே பூங்கொம்பில் வாழும்
பெண் வண்டுகளும். கருங்கூந்தலில் படிந்த ஆண் வண்டுகளும் புதுமணம் புரிவதை அங்கே தங்கிய மகிளர் கண்டார் என்பது. |
No comments:
Post a Comment