Wednesday, July 25, 2018

மந்தாரை (ஆத்தி)

மந்தாரை
முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை
தாவரவியல் பெயர் : Bauhinia purpurea L.

குடும்பம் : Caesalpiniaceae
ஆங்கிலம் : Butterfly plant
வளரிடம் : இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், தரிசு மற்றும் மித வெப்பமான பகுதிகளில் காணப்படும்.
வளரியல்பு : சிவப்பு மலர்கள் இலைகளோடு முனையில் காணப்படும். ஃபாளிக்கிள் மஞ்சரியில் அமைந்திருக்கும். புல்லிகள் ஒழுங்கற்ற முறையில் 3-5 பிளவுகள் கொண்டவை. வளமான மகரந்தத்தாள்கள் 3 அல்லது 4 வெடி கனி, குறுகி, தட்டையாக்கப்பட்டு திடமானவை. விதைகள் 12-15. வறண்ட பகுதிகளில் காணப்படும்.
மருத்துவப் பயன்கள் : மலர்கள் மிதமான பேதிமருந்து, உலர்ந்த மொட்டுகள் பூச்சிகளை நீக்கும். சீதபேதி மற்றும் மூலவியாதியைக் குணப்படுத்தும். பட்டை வயிற்றுப் போக்கினை நீக்கும். வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக்கட்டிகளைக் குணப்படுத்த உதவும், அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன் கலந்து குரல்வளைச் சுரப்பி வீக்கத்துக்குத் தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும்.




853.
ஆடவர் ஆவி சோர.
   அஞ்சன வாரி சோர.
ஊடலின் சிவந்த நாட்டத்து
   உம்பர்தம் அரம்பை மாதர்.
தோடு அவிழ் கோதைநின்றும்
   துறந்த மந்தார மாலை.
வாடல. நறவு அறாத.
   வயின் வயின் வயங்கும் மாதோ!

 
ஆடவர்  ஆவி   சோர  -  (தம்)  கணவரின்  உயிர்  வருந்தித்
தளரும்படி;  அஞ்சனம்  வாரி  சோர - (தீட்டிய) மையுடன் கண்ணீர்
பெருகுமாறு; ஊடலில்  சிவந்த  நாட்டத்து  -  புலவியால் செந்நிறம்
அடைந்த   கண்களையுடைய;  உம்பர்தம்   அரம்பை   மாதர்   -
தேவர்களின்   மனைவியர்;   கோதை  நின்றும்   துறந்த   -  தம்
முடிகளிலிருந்து கழற்றி எறிந்த; தோடு அவிழ் மந்தார மாலை - இதழ்
விரிந்த  மந்தார  மாலைகள்;  வாடல நறவு அறாது - வாடாதனவாகித்
தேனும்  நீங்காமல்; வயின் வயின் வயங்கம் - அந்தந்த இடங்களிலே
விளங்கும். 
ஊடல்     கொண்ட  தேவ  மாதர் தம் கணர் வருந்துமாறு சிவந்த
கண்களில்  கண்ணீரைப்  பெருக்கிக்  கழற்றியெறிந்த மந்தார மாலைகள்
அம்  மலையின்  பல  இடங்களிலும்  காணப்படும்   என்பது.  தெய்வ
மாலையாதலின் வாடாமலும். நறவு அறாமலும் இருந்தன. 

No comments:

Post a Comment