Tuesday, August 14, 2018

அகில் மரம் (Agarwood- aquilaria agallocha)

பெரிய மரம். அக்விலேரியா அகல்லோச்சா இனத்தைச் சார்ந்தது. தைமீலியேசீ குடும்பத்தைச் சேர்ந்தது. 60-70 உயரமும், 5-8 ஆதி சுற்றளவுமுள்ளது.இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் முக்கியமாக அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, நாகா மலைக்காடுகளில் வளர்கிறது. பர்மாவிலும் உண்டு.

பயன்கள்


பட்டையிலுள்ள நார் காகிதம் செய்யவும், கயிறு திரிக்கவும் உதவுகிறது. பிசின்
வடிவதில்லை. சற்று முதிர்ந்த மரத்தில் சில இடங்கள் கறுப்பாயிருக்கும். அதில் ஒருவித எண்ணெய்ப் பிசின் உள்ளது. வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. இதிலிருந்து உருவாகும் தைலத்திற்கு அகர் அத்தர் என்று பெயர். தைலம் வாசனைப் பொருளாகவும், வாசனைப் பொருள்களைக் கலப்பதற்கும் பயன்படுகிறது. துணிகளில் தூவி வைப்பதால் பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஊதுபத்தி, அகர்பத்தி (Agarbatti)
செய்யவும் பயன்படுகிறது


அமைப்பு

.மரம் நோயுற்றது போல இருக்கும். பிசின் கிளைகள் கலக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும். ஒரு விதக் காளான் மரத்தில் பற்றிக்கொண்டு வளர்வதுதான் அகில் உண்டாவதற்குக் காரணமாகும். நல்ல மரங்களில் காளான் பற்றியிருக்கும். அகில் தரும் மரங்களில் சில இனங்களுண்டு. இந்தியாவிலுள்ள முக்கியமான மரம் அக்விலேரியா அகல்லோச்சா இனமாகும்.
  
ஏற்றுமதி
 பெரும்பாலும் அஸ்ஸாமிலிருந்து பல இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. மிகப் பழைய காலந்தொட்டு தமிழ்மக்கள் அகிற் கூட்டுக்களில் பெரு விருப்பம் உடையவர்கள்.







 




1041.நறு விரைத் தேனும். நானமும். நறுங் குங்குமச்
செறி அகில் தேய்வையும். மான்மதத்து எக்கரும்.
வெறியுடைக் கலவையும். விரவு செஞ் சாந்தமும்.
செறி மதத் கலுழி பாய் சேறுமே - சேறு எலாம்.
 
நறுவிரைத் தேனும் நானமும்- நறுமணமுடைய தேனும்.  (கூந்தலில்
கலந்தொழுகும்)  புனுகும்;  நறுங்குங்குமச் செறிஅகில் தேய்வையும்-
நல்ல   வாசனையுடைய   குங்குமப்   பூவோடு   சேர்ந்த   திண்ணிய
அகிற்கட்டைத் தேய்வினால் ஆகிய குழம்பும்; மானமதத்து எக்கரும் -
மான்மதமாகிய  கத்தூரியின்  மிகுதியும்;  வெறியுடைக்  கலவையும் -
பரிமளமுடைய  பல்வேறு  வாசனைப்   பொருள்களின்   சேர்க்கையும்;
செஞ்சாந்தமும் 
- செந்நிறச் சந்தனமும்; விரவு செறி மதக் கலுழியாய்
சேறுமே    
-   சேர்தலால்   உண்டான    சேறுகளுடனே.   மிகுந்த
யானைகளின்  திரள்களில்  உண்டான  மதநீர்  பாய்கின்ற  சேறுகளும்;
சேறு  எலாம்  
-  (சேர்ந்த கலவையே படைசெல்லும் வழியில் உள்ள)
சேறுகள் யாவும். 
இழிகுணச் சேறின்றி. நறுமணச் சேறே வழியெங்கும் என்று கற்பித்து.
செல்வ வளமும். நாகரிகச் செழுமையும் சுட்டியவாறு. கலுழி - வெள்ளம்.

No comments:

Post a Comment