Sunday, August 5, 2018

புன்னை (calophyllum inophyllum)

புன்னை (calophyllum inophyllum) மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்றுப் பெரியவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்துகட் பகுதியும் கொண்டது. புன்னை மரத்தின் அறிவியற் பெயர் calophyllum inophyllum என்பதின் முதற்பகுதி calophyllum என்பதன் பொருள் அழகான இலை. calo என்பது கிரேக்கச் சொல்லான καλός (காலோசு), என்பதில் இருந்து பெற்றது. அதன் பொருள் அழகானது, அருமையானது என்பது. phyllum (φύλλον) என்பது இலை. சிங்கள மொழியில் இது தொம்ப (දොඔ) எனவும், மலையாளத்தில் புன்னாகம் പുന്നാഗം எனவும் அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகள், மியன்மார்மலேசியாஆத்திரேலியாஇலங்கை, கிழக்காபிரிக்கக் கரையை அண்டிய தீவுகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இது ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது. இந்தியாவில் மும்பாய்க்கும் இரத்தினகிரிக்கும் இடைப்பட்ட பகுதியிலும், அந்தமான் தீவுகளிலும்பெருமளவில் காணப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் கடற்கரையோரப்பகுதிகளில் காணலாம்.
இதன் தோற்றம் காரணமாக, நகரப் பகுதிகளில் அழகுக்காக சாலையோரங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றது.

925.
நாறு பூங் குழல் நன்னுதல். புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று. ஏறினாள்;-
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்.
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ! 
 
நாறு     பூங்குழல்  நன்னுதல் -  மணக்கின்ற  பூக்களையணிந்த
கூந்தலையும்    அழகிய    நெற்றியையும்     உடையாள்    ஒருத்தி;
புன்னைமேல்  ஏறினான்  
-  புன்னை  மரத்தின்  மீது  (பூக்கொய்ய)
ஏறியுள்ள  தன்  கணவனுடைய;
  மனத்து உம்பர் சென்று ஏறினாள்-
மனத்தின்  மீது  ஏ?றி அமர்ந்திருந்தாள்; ஊறு ஞானத்து உயர்ந்தவர்
ஆயினும்  
-  மனத்தில்  ஊற்றாய்ச்  சுரக்கின்ற   அறிவினைப் பெற்ற
உயர்ந்தோர் ஆனாலும்; வீறுசேர்  முலை  மாதரை  வெல்வரோ? -
பெருமைமிக்க     தனங்களையுடைய    பெண்டிரை   வெல்லவல்லவர்
ஆவரோ? (ஆகார் என்க.) 
அவன்     புன்னை மேல் ஏறினான்.  இவளோ அவன் உள்ளத்தின்
மேல்  ஏறினாள்.  உருவுடைய  மரத்தின்   மேல்  ஏறலினும்  உருவற்ற
உள்ளத்தின்மேல்  ஏறல்    அன்றோ   உயர்வுக்குரியது   என்றவாறு.
வேற்றுப்பொருள்வைப்பணி.   ஞானத்தால்   உயர்ந்தாரும்   காமத்தால்
தாழ்வர்  என்பது குறிப்பு. “வஞ்சி போல் மருங்குலார்  மாட்டு  யாவரே
வணங்கலாதார்?” (896) என்று முன்பும் கூறினார்.  

No comments:

Post a Comment