Saturday, August 25, 2018

கமுகு (பாக்கு மரம்)


பூஞ்சோலைகளில் பாக்குமரத்தில் ஊஞ்சல் கட்டப்படுவது மரபு

1099.பூக ஊசல் புரிபவர்போல். ஒரு
பாகின் மென்மொழி. தன் மலர்ப் பாதங்கள்
சேகு சேர்தர. சேவகன் தேரின்பின்.
ஏகும். மீளும்; இது என் செய்தவாறுஅரோ?
 
ஒரு   பாகு   இன்மொழி-  (கருப்பஞ்  சாற்றின்)  பாகு போன்ற
இனிக்கும்  மொழி  பேசுவாள்  ஒருத்தி; பூக ஊசல் புரிபவர் போல்-
பாக்கு மரங்களுக்கிடையே கட்டப்பட்ட ஊஞ்சலில்  விரும்பி ஆடுபவர்
போன்று
;தன் மலர்ப் பாதங்கள்  சேகு  சேர்தரச் சேவகன்  தேரின்பின்
ஏகும்;  மீளும்  -  தன்னுடைய  செந்தாமரைப்   பூப்போன்ற  சிவந்த
பாதங்கள்  மேலும்  சிவந்து  போகும்படி  உயர்  வீரனான இராமனின்
தேர்  ஏகுகையில்  பின்னால்  செல்வாள். நாணத்தால்  மீள்வாள்; இது
என்  செய்த  வாறு? 
- (தொடர்ந்து ஏகவும் மீளவும் இருக்கும் இவள்)
என்ன கருதி இவ்வாறு செய்கிறாள்?
அரோ     - அசை. ஒன்று. போக வேண்டும்;அல்லது  திரும்பிவிட
வேண்டும்.  இரண்டில்  ஒன்று செய்யாமல் இரண்டும்   செய்கிற  இவள்
உகந்தது  என்  என  வியந்தார்.  மையல் கொண்டார்  ஊசல்  ஆடும்
உளத்தினராய்த்   தவிப்பவர்   எனச்  சுட்டியவாறு  “கமுகு    பூண்ட
ஊசலில்.
 மகளிர்  மைந்தர் சிந்தையோடு  உலவக் கண்டார்” (கம்.488)
எனவும் “ஊசல் ஆடி  வளையும்  உளத்தினான்” (கம்ப. 5167)  எனவும்
தடுமாறு நிலைக்கு ஊசலை உவமிப்பார்.                        37 

No comments:

Post a Comment