எடை குறைக்கும், கர்ப்பப்பை பிரச்னை தீர்க்கும்.
கணக்கில்லா பலன்கள் தரும் கல்யாண முருங்கை!
கல்யாண முருங்கை... `Erythrina Indica’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை.
இதன் இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் பல வேதிப்பொருள்கள் உள்ளன. வெற்றிலை, மிளகு போன்ற கொடி வகைத் தாவரங்கள் பயிரிடப்படும் இடங்களில் அவை வளர்வதற்கு ஏதுவாக இது வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் கொடிக்கால்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது. இதன் முழுத்தாவரமும் காரச்சுவையும் வெப்பத்தன்மையும்கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும் பளிச்சிடும் சிவப்பு நிறப் பூக்களையும்கொண்டது.
இதன் இலை, சிறுநீரைப் பெருக்குவதோடு மலத்தை இளக்கும்; தாய்ப்பாலை பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்.
இதன் பூக்கள், கருப்பையைச் சுத்தமாக்கும். பட்டைகள், கோழை அகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடல்புழுக்களைக் கொல்லும். விதைகள், மலமிளக்கும்.
கன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் இதை நட வேண்டும் என்பது மரபாக இருந்திருக்கிறது. அதேபோல் பெண்கள் அதிகமாக உள்ள வீடுகளில் இந்த மரத்தை நட்டு, அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னையும் இல்லாமல் இளமையுடன், அழகான பெண்ணாக உருவெடுத்து நிற்பார்கள். அவர்களுக்கு வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த முருங்கை.
இந்த மரம் பெரும்பாலும் பெண்களின் உடல்நலனுக்கு நன்மை பயக்கக்கூடியது. மாதவிடாயின்போது வரக்கூடிய வயிற்றுவலியைக் குணமாக்க, இதன் 30 மி.லி இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் தொடர்ந்து குடித்துவர வேண்டும். அதேபோல் இலையிலிருந்து
ரசம் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுவலி குணமாகும்.
கறுப்பு எள் ஊறவைத்த நீர்விட்டு, இதன் இலையை அரைத்து, காலை, மாலை என சாப்பிட்டுவந்தால் தாமதித்த மாதவிடாய் சீராகும்.
கர்ப்பக் காலங்களில் இதன் இலைகளை அரிந்து, சிறு பயறுடன் சேர்த்து வேகவைத்துக் கொடுப்பார்கள். இது கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய சிறுநீர் எரிச்சலைக் குணமாக்கும்; தாராளமாக சிறுநீர் வெளியேற உதவும்.
இதன் இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை அருந்துவதால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரிகும்; உடல் இளைக்கும்.
குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு
சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரக்க வேண்டுமென்றால், இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்துச் சாப்பிட்டுவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய், நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரக்கும்.
இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும்; தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும்.
குடல்புழுக்களின் தொல்லையால் சில குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் 10 சொட்டு கல்யாண முருங்கை இலைச் சாற்றை சிறிது வெந்நீர், தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் பலன் கிடைக்கும். பெரியவர்கள் இதன் 4 டீஸ்பூன் இலைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், புழுக்கள் வெளியேறும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோர் குடிக்க வேண்டும்.
இதன் இலைச் சாற்றுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து, மேல் பூச்சாகப் பூசிக் குளித்துவந்தால், சொறி, சிரங்கு சரியாகும். 60 மி.லி இலைச் சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்துவந்தால் லேசான வயிற்றுப்போக்கு உண்டாகும். அப்போது வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகல வேண்டுமென்றால், இலையுடன் அரிசி சேர்த்து அரைத்துத் தோசை செய்துசாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
இதன் இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள். இதுவும் சளியை அகற்றும் தன்மைகொண்டது.
கல்யாண முருங்கையுடன் முருங்கை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தச்சோகை சரியாகும்.
974. | ‘யாழ்க்கும். இன் குழற்கும். இன்பம் அளித்தன இவை ஆம்’ என்ன கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள். தாள் கருங் குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள். தன் வாள்-கணின் நிழலைக் கண்டாள்; வண்டு என ஓச்சுகின்றாள். |
யாழ்க்கும் இன்குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன- வீணையின் இசைக்கும். இனிய குழலிசைக்கும் (இசை) இன்பம்
கொடுத்தவை இவள் சொற்கள்தாம் என்னுமாறு; கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்தவாயாள் - (இனிதான ஒலி) கேட்கச் செய்கிற மெல்லிய மழலை மொழியினையும். முருக்க மலர் அனைய சிவந்த வாயினையும் உடையாள் ஒருத்தி; தாள் கருங்கு குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள் - தண்டினையுடைய கருங்குவளை மலர் இடப் பட்டுள்ள குளிர்ந்த கள்ளினையுடைய சாடியின் உள்ளே; தன் வாள்க(ண்)ணின் நிழலைக் கண்டாள் - தன்னுடைய வாள்போன்ற கண்களின் நிழலைப் பார்த்தாள் (நிழலென அறியாது.); வண்டென ஓச்சுகின்றாள் - (உள்ளே உள்ள குவளை மலர்களில் மது வுண்ண வந்த வண்டுகள் என்று) தன்கண்நிழலை ஓட்டலானாள்!
எல்லா இனிமைப் பொருட்கும் இனிமைகொடுக்க வல்லவை குழலும்
யாழும். அவற்றுக்கும் இனிமை கொடுக்க வல்லவை இவள் மழலைச் சொற்கள் என்க.
கட் சாடியுள் மணத்திற்காகக் குவளை. தாமரை முதலிய மலர்களை
இட்டு வைத்தல் மரபு. அந்த மலர்களை மொய்க்க வண்டுகள் வந்து விட்டன என்று கருதிச் சாடியுள் தெரிந்த தன் விழி நிழலை ஓட்டுகின்றாள்! மதுப்பழக்கம் நகைப்பிற்கு இடம் ஆனவற்றையே செய்யும் என மேலும் உணர்த்தியவாறு. |
No comments:
Post a Comment